< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
5 கிலோ குட்கா, 45 மது பாட்டில்கள் பறிமுதல்
|3 Sept 2023 2:52 AM IST
5 கிலோ குட்கா, 45 மது பாட்டில்கள் பறிமுதல்
தக்கலை:
தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் தலைமையிலான போலீசார் நேற்று தக்கலை சுற்றுவட்டார பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் திருவிதாங்கோடு பகுதியில் உள்ள ஒரு கடையில் திடீரென ேசாதனை செய்தனர். அப்போது அந்த கடையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து 5 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து கடை உரிமையாளரான இப்ராகீம் (வயது52) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல், சாமியார்மடம் மற்றும் மணலி பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டதாக சாமியார்மடத்தை சேர்ந்த ஸ்டீபன் (36), வலியவிளையை சேர்ந்த ஜோஸ்(48) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 மதுபாட்டில்கள், ரூ.1400 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.