5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவு
|தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து முதன்மை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார். அதன்படி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி துணைக் கோட்டம், துணை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பிருந்தா ஐ.பி.எஸ்., சேலம் வடக்கு மாநகர துணை காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் துணைக் கோட்டம், துணை காவல் கண்காணிப்பாளர் அய்மன் ஜமால் ஐ.பி.எஸ்., ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
சேலம் வடக்கு மாநகர துணை காவல் ஆணையர், கவுதம் கோயல் ஐபிஎஸ்., தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பள்ளிக்கரணை சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு துணை காவல் ஆணையர், என்.பாஸ்கரன், தமிழ்நாடு சிறப்புக் காவல் பட்டாலியன் மதுரை கமாண்டன்ட்டாக நியமிக்கப்பட்டுள்ளார். சுகுணா சிங் ஐபிஎஸ்., சென்னை ரெயில்வே காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.