< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டையில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
2 May 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டையில் கார் கவிழ்ந்து 5 பேர் படுகாயமடைந்தனர்.

உளுந்தூர்பேட்டை,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் தனது குடும்பத்துடன் காரில் திருச்சி சென்றார். பின்னர் அதே காரில் ஊருக்கு புறப்பட்டார். காரை திண்டிவனம் பகுதியை சேர்ந்த முரளிதரன் என்பவர் ஓட்டினார். உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டு்ப்பாட்டை இழந்த கார், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த பாலாஜி, முரளிதரன் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்