< Back
மாநில செய்திகள்
5 வீடுகள் எரிந்து நாசம்
திருவாரூர்
மாநில செய்திகள்

5 வீடுகள் எரிந்து நாசம்

தினத்தந்தி
|
2 March 2023 12:15 AM IST

திருவாரூரில் 5 வீடுகள் தீயில் எாிந்து நாசமடைந்தன. இதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன


திருவாரூரில் 5 வீடுகள் தீயில் எாிந்து நாசமடைந்தன. இதில் ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதமடைந்தன

திடீரென தீ பிடித்தது

திருவாரூர் முனிசிபல் காலனி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ஜெயபால். இவருடைய மனைவி வள்ளி(வயது42). இவர்களின் கூரைவீடு நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீப்பொறி பறந்து அந்த பகுதியில் உள்ள ராஜவேணி, முத்தம்மாள், மாரியம்மாள் மற்றும் எதிரில் உள்ள இளங்கோவன் வீடுகளின் மேல் விழுந்தது. இதனால் அந்த வீடுகளும்தீப்பிடித்து எரிய தொடங்கின. உடனே அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எரிந்து சேதம்

இதுகுறித்து திருவாரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள்

சம்பவ இடத்துக்கு சென்று போராடி தீயை அணைத்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு சென்று மின் இணைப்புகளை துண்டித்தனர்.

இருப்பினும் 5 வீடுகளும் முற்றிலும் எரிந்து நாசமடைந்தது. தீ விபத்தில் வீடுகளில் இருந்த ஆடைகள், பாத்திரங்கள், பீரோ, கட்டில், மின்சாதன பொருட்கள், முக்கிய சான்றிதழ்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு 12 லட்சம் என கூறப்படுகிறது.

மின்கசிவு

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த திருவாரூர் தாசில்தார் நக்கீரன், கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் கலையரசன் மற்றும் அதிகாாிகள் சம்பவ இடத்து சென்று தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தலா 10 கிலோ அரிசி, பருப்பு, காய்கறி, வேட்டி சேலை மற்றும் ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை வழங்கினர்.

மேலும் திருவாரூர் நகர் மன்ற தலைவர் புவனபிரியா செந்தில் தீ விபத்தில் எரிந்து நாசமடைந்த வீடுகளை நேரில் பார்வையிட்டார். இதுதொடர்பாக திருவாரூர் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமான தீவிபத்து நடந்தது தெரிவந்தது.

Related Tags :
மேலும் செய்திகள்