< Back
மாநில செய்திகள்
நாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன

தினத்தந்தி
|
11 Jun 2023 11:42 PM IST

நாய்கள் கடித்து 5 ஆடுகள் செத்தன.

வடகாடு அருகேயுள்ள புள்ளான்விடுதி பேப்பர் மில் அருகே கடந்த வாரம் புள்ளிமான் ஒன்று நாய்கள் கடித்ததில் செத்தது. இந்தநிலையில், வடகாடு சாத்தன் பட்டியில் 5 ஆடுகளை, 5 நாய்கள் சேர்ந்து கடித்ததில் செத்தது, அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பகுதிகளில் கோழிக்கழிவுகளை குழிதோண்டி புதைக்காமல் ஒரு சிலர் குளக்கரை பகுதிகளில் கொட்டி விடுவதால் அவைகளை தின்று ருசி கண்ட நாய்கள் வெறி கொண்ட நிலையில், ஒன்று திரண்டு இதுபோல் அவ்வப்போது ஆடு, மாடு மற்றும் கோழிகளை காவு வாங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சில சமயங்களில் பொதுமக்கள் பலரும் இதனால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்