< Back
மாநில செய்திகள்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்
கொட்டகையில் கட்டியிருந்த 5 ஆடுகள் திருட்டு
|5 Jun 2022 10:28 PM IST
கொட்டகையில் கட்டியிருந்த 5 ஆடுகள் திருட்டு
மத்தூர்:
மத்தூர் அருகே உள்ள சிவம்பட்டி ராமசாமி செட்டியார் வட்டத்தை சேர்ந்தவர் குமார் (வயது 45). இவர் தனது விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து ஆடுகளை வளர்த்து வந்தார். கொட்டகை அருகில் காவல் பணிக்காக உயர்ரக ராஜபாளையம் நாய் ஒன்றை வளர்த்து வந்தார். இந்த நிலையில் கொட்டகை அருகே வந்த மர்ம நபர்கள் கொக்கு விஷத்தை சோற்றில் கலந்து நாய்க்கு சாப்பிட கொடுத்துள்ளனர். அதை சாப்பிட்ட நாய் சுருண்டு விழுந்து இறந்தது. இதையடுத்து கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்த 5 ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இவற்றின் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இதுகுறித்து குமார் மத்தூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசர்ா விசாரணை நடத்தி வருகின்றனர்.