< Back
மாநில செய்திகள்
கூடலூர், உத்தமபாளையம் பகுதிகளில் 5-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்
தேனி
மாநில செய்திகள்

கூடலூர், உத்தமபாளையம் பகுதிகளில் 5-ந்தேதி மின்சாரம் நிறுத்தம்

தினத்தந்தி
|
2 July 2022 11:09 PM IST

கூடலூர், உத்தமபாளையம் பகுதிகளில் வருகிற 5-ந்தேதி மின்சாரம் நிறுத்தப்படுகிறது

வண்ணாத்திப்பாறை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 5-ந்தேதி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி குள்ளப்பகவுண்டன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, லோயர்கேம்ப், மேல்மணலாறு, கீழ்மணலாறு, ஹைவேவிஸ், இரவங்கலார், கம்பம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் வருகிற 5-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இதேபோல் உத்தமபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி உத்தமபாளையம், கோம்பை, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆணைமலையன்பட்டி, அணைப்பட்டி, மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட மார்க்கையன்கோட்டை, சின்னமனூர், அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, சின்னஓவுலாபுரம் துணை மின் நிலையத்துக்கு உட்பட்ட கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர், இந்திராகாலனி, பூசாரிகவுண்டன்பட்டி, முத்துலாபுரம், ராமசாமிநாயக்கன்பட்டி, ஊத்துப்பட்டி ஆகிய பகுதிகளில் அன்றை தினம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின் வாரிய செயற்பொறியாளர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்