< Back
மாநில செய்திகள்
வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்பு

தினத்தந்தி
|
29 Nov 2022 3:43 PM IST

வாலாஜாபாத் தாலுகாவில் ரூ.5 கோடி அரசு நிலம் மீட்கப்பட்டது.

நிலம் ஆக்கிரமிப்பு

தமிழகத்தில் ஏரி, குளம், ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டி ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரி, குளம், ஆறு, உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை தமிழக அரசு முடுக்கி விட்டுள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தாலுகா இளையனார் வேலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வள்ளிமேடு, காலூர் ஊராட்சிக்கு உட்பட்ட வேடல் போன்ற கிராமப்புற பகுதிகளில் நீர்நிலை புறம்போக்குகளான குளம் மற்றும் கால்வாய் பகுதிகளை பல ஆண்டு காலமாக ஆக்கிரமித்து பயிர் செய்து வருவதும், வேலி அமைக்கப்பட்டுள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.

ரூ.5 கோடி நிலம் மீட்பு

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவின் பேரில் கிராம பகுதிகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த ரூ.5 கோடி மதிப்புடைய 6 ஏக்கர் நீர்நிலை புறம்போக்கு நிலத்தை வாலாஜாபாத் தாசில்தார் லோகநாதன் தலைமையிலான கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்களுடன், வருவாய் துறையினர் உதவியுடன் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்டனர்.

மேலும் மீட்கப்பட்ட இடத்தில் மீண்டும் யாரும் அத்துமீறி நுழையக்கூடாது என அறிவிப்பு பலகையும் வைத்து விட்டு சென்றனர்.

மேலும் செய்திகள்