< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி

தினத்தந்தி
|
29 Aug 2023 12:12 AM IST

மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பறையங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் ஆறுமுகம், கருமலையான், வெள்ளைச்சாமி, முனியசாமி. இவர்களது பசுமாடுகள் மேய்ச்சலுக்கு வயல் பகுதிக்கு சென்றன. அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் 5 மாடுகள் மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக இறந்தன. மின்சாரம் தாக்கி இறந்த தங்களது மாடுகளை கண்டதும் பெண்கள் அழுது புலம்பினர். மேலும் 4 பசுமாடுகளை காணவில்லை என தெரிவித்தனர். இதுகுறித்து கோவிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்