கரூர்
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம்
|கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 5 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது.
தமிழக சட்டபேரவையில் அமைச்சர் சேகர்பாபு, பொருளாதாரத்தில் பின்தங்கிய இணைகளுக்கு கோவில்கள் சார்பாக 4 கிராம் தங்க தாலி உள்பட ரூ.50 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமண விழா நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 500 இணைகளுக்கு திருக்கோவில் சார்பில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த ஆண்டு கூடுதலாக மேலும் 100 இணைகளை சேர்த்து ஒரு மண்டலத்திற்கு 30 இணைகள் வீதம் 600 இணைகளுக்கு திருக்கோவில் சார்பாக திருமண விழா நடத்தி வைக்கப்படும் என அறிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து நேற்று கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 5 இணைகளுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. இளங்கோ, கரூர் மாநகராட்சி துணை மேயர் தாரணி சரவணன், கரூர் மாவட்ட உதவி ஆணையர் ஜெயதேவி, தாந்தோன்றிமலை வெங்கடரமணசுவாமி கோவில் உதவி ஆணையர் நந்தகுமார், கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.