< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
|4 July 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்த முயன்ற 5 மாட்டு வண்டிகள் பறிமுதல்
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உடையானந்தல் கிராமத்தில் உள்ள ஆற்றுப்பகுதியில் இருந்து மர்ம நபர்கள் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி செல்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருநாவலூர் போலீசார் உடையானந்தல் கிராமத்தில் உள்ள ஆற்று பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மாட்டு வண்டிகளில் மணல் அளிக்கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடி விட்டனர். இதையடுத்து 5 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடிய 5 மாட்டு வண்டி தொழிலாளர்களையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.