கடலூர்
மதுபாட்டில் விற்ற 5 போ் சிக்கினர்
|காட்டுமன்னார்கோவில் பகுதியில் மதுபாட்டில் விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் பகுதியில் சிலர் டாஸ்மாக் மதுபாட்டில்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கடந்த 2 நாட்களாக அதிரடி வேட்டையில் களம் இறங்கினர்.இதில் ரெட்டியூர் பகுதியில் உள்ள தொட்டி மதகு அருகில் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த அதே கிராமம் நடுத்தெருவை சேர்ந்த அன்பழகன்(வயது 39), மேல பக்கத்துறை முருகன் கோவில் தெரு சக்கரவர்த்தி(42) ஆகிய இவருரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 19 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்த கொல்லிமலை கீழ்பாதி கிராமம் சாவடி தெரு ரமேஷ்(34), நாட்டார் மங்கலம் பஸ் நிலையம் அருகில் மதுபாட்டில்களை விற்பனை செய்த இருதயபுரம் கிராமம் ஜேம்ஸ்(47), தெற்கிருப்பு பெட்ரோல் பங்க் அருகில் மதுபாட்டில்களுடன் நின்று கொண்டிருந்த தொருக்குழி கிராமம் வடக்கு தெரு கபிலர் ஆகிய 3 பேரையும் கைது செய்த போலீசார் இவர்களிடம் இருந்து 23 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.