திருவள்ளூர்
தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேர் கைது
|கூடுவாஞ்சேரி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம் அருகே ஒரு கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கடையில் இருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றதாக தைலாவரம் பகுதியை சேர்ந்த கணேசன் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அதேபோல நந்திவரம் அரசு ஆதிதிராவிடர் பள்ளி அருகே உள்ள ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற பாலு (வயது 33) என்பவரை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து அவரிடமிருந்து புகையிலையை பறிமுதல் செய்தனர். மண்ணிவாக்கம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கிலால் (24), ஜாபர் (55), அயூப் (30) ஆகியோரை ஓட்டேரி போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கைப்பற்றினர்.