< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது
விருதுநகர்
மாநில செய்திகள்

அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேர் கைது

தினத்தந்தி
|
25 Oct 2023 1:57 AM IST

ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 5 பேைர போலீசார் கைது செய்தனர்.

அனுமதியின்றி பட்டாசு எதுவும் தயாரிக்கப்படுகிறதா? என ஏழாயிரம் பண்ணை சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், பாலசுப்பிரமணியம், வெம்பக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் வெற்றி முருகன் ஆகியோர் தலைமையில் போலீசார் பேர்நாயக்கன்பட்டி, மஞ்சள் ஓடைபட்டி, மார்க்கநாதபுரம், பாறைபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை நடத்தினர்.அப்போது பேர்நாயக்கன்பட்டி காட்டுப்பகுதியில் தகரசெட் அமைத்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த சித்துராஜபுரம் தங்கப்பா நகரை சேர்ந்த ரமேஷ் (வயது35) என்பரிடம் இருந்து 20 கிலோ பேன்சி ரக வெடிகளை பறிமுதல் செய்தனர்.

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சள் ஓடைபட்டியை சேர்ந்த கந்தசாமி (வயது50) என்பவரிடம் இருந்து 10 குரோஸ் கருந்திரியை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.அதேபோல மார்க்கநாதபுரம் பகுதியில் தகரசெட் அமைத்து பட்டாசு தயாரித்து கொண்டிருந்த மஞ்சள் ஓடைபட்டி மேற்கு தெருவை சேர்ந்த அருண்குமார் (30), நடுத்தெருவை சேர்ந்த வைரமணி (35), சின்னதம்பி (42) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடம் இருந்து தலா 20 கிலோ பேன்சி ரக வெடிகள் மற்றும் 10 குரோஸ் கருந்திரி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்