< Back
மாநில செய்திகள்
கஞ்சா பயிரிட்ட 5 பேர் கைது
தேனி
மாநில செய்திகள்

கஞ்சா பயிரிட்ட 5 பேர் கைது

தினத்தந்தி
|
8 Jun 2022 10:30 PM IST

வருசநாடு அருகே மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்த 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு அருகே ஓயாம்பாறை வனப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் கஞ்சா பயிரிட்டு இருப்பதாக வருசநாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆண்டிப்பட்டி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை செய்தனர். அதில் ஊசிமலைக்கரடு என்னுமிடத்தில் கஞ்சா பயிரிட்டு இருப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு இருந்த சில கஞ்சா செடிகளை அகற்றினர். மேலும் அந்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஞ்சா செடிகளை பறித்து சென்ற அடையாளம் காணப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அதில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், வருசநாடு அருகே உள்ள காந்திகிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி (வயது 57), தண்டியங்குளம் கிராமத்தை சேர்ந்த செல்வம் (60), பெருமாள் (36), வாலிப்பாறையை சேர்ந்த சந்திரன் (45), தும்மக்குண்டுவை சேர்ந்த மற்றொரு பெருமாள் (65) என்றும், அவர்கள் மலைப்பகுதியில் கஞ்சா பயிரிட்டு விற்பனைக்காக கொண்டு செல்வதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்