< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை
மாநில செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை

தினத்தந்தி
|
28 Nov 2023 12:43 PM IST

கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

குமரி,

நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் மாதம் இறுதியில் தொடங்கி டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் முடிவடையும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 11 நாட்கள் திருவிழா நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 4-ந் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி, 8 மணிக்கு மலையாள திருப்பலி, காலை 11 மணிக்கு தேர்ப்பவனி, மாலை 7 மணிக்கு தேரில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி ஆகியவை நடக்கிறது.

இந்த நிலையில், கோட்டார் தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 4-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக டிசம்பர் 16-ம் தேதி வேலை நாளாக செயல்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்