< Back
மாநில செய்திகள்
ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து 4-ம் நாள் உற்சவம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து 4-ம் நாள் உற்சவம்

தினத்தந்தி
|
28 Dec 2022 12:15 AM IST

திருவரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து 4-ம் நாள் உற்சவம்

ரிஷிவந்தியம்

ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட திருவரங்கம் கிராமத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த ரங்கநாயகி தாயார் சமேத ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்று வருகிறது.

தமிழகத்திலேயே மிகப்பெரிய அளவிலான ரங்கநாத பெருமாள், சயன நிலையில் மூலவராக எழுந்தருளியுள்ள இக்கோவிலில் கடந்த சனிக்கிழமை பகல் பத்து உற்சவம் தொடங்கியது. உற்சவத்தின் 4-வது நாளான நேற்று ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாளுக்கு காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து நவராத்திரி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார், இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவை தொடர்ந்து வருகிற 2-ந் தேதி அதிகாலை சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்