கோயம்புத்தூர்
கோவையில் 4-வது நாளாக அண்ணாமலை பாத யாத்திரை
|கோவையில் 4-வது நாளாக அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவையில் 4-வது நாளாக அண்ணாமலை பாத யாத்திரை மேற்கொண்டார். அவருக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பாத யாத்திரை
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் 'என் மண் என் மக்கள்' என்ற பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி கோவையில் நேற்று 4-வது நாளாக தெற்கு சட்டமன்ற தொகுதியில் பாதயாத்திரை நடைபெற்றது.
கோவை ராம்நகர் ராமர் கோவிலில் இருந்து மாலை 5 மணியள வில் அண்ணாமலை தனது பாதயாத்திரையை தொடங்கினார். அப்போது அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் பூக்கள் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் அவருக்கு ஆப்பிள் மாலை அணிவிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
இந்த யாத்திரை ராமர் கோவிலில் தொடங்கி காமராஜபுரம், பூ மார்க்கெட் வழியாக ராஜவீதிக்கு சென்று தேர் நிலை திடலில் நிறைவடைந்தது. அங்கு அவருக்கு பட்டாசு வெடித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து திறந்த வேனில் நின்றவாறு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
இதில் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., மாநகர் மாவட்ட தலை வர் பாலாஜி உத்தம ராமசாமி, விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ், காளப்பட்டி மண்டல் தலைவர் வி.செல்வராஜ், தொழில்துறை பிரிவு மாநில துணைத்தலைவர் சுப.செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.