< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் குரூப்-4 தேர்வு எழுதினர்

தினத்தந்தி
|
25 July 2022 9:30 AM GMT

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நடைபெற்ற குரூப்-4 தேர்வை 49 ஆயிரத்து 518 பேர் எழுதினர். கால தாமதமாக வந்ததால் சிலருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

குரூப்-4 தேர்வு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப்-4 பதவிக்கான தேர்வுகள் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், ஆவடி, கும்மிடிப்பூண்டி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, ஆர்.கே.பேட்டை, திருத்தணி போன்ற பகுதிகளில் 195 தேர்வு மையங்களில் 60 ஆயிரத்து 305 பேர் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இதற்கான தேர்வுகள் நேற்று நடைபெற்றது.

இந்த நிலையில் விண்ணப்பித்திருந்த 60 ஆயிரத்து 305 தேர்வர்களில் நேற்று 49 ஆயிரத்து 518 பேர் தேர்வு எழுதினார்கள். மீதமுள்ள 10 ஆயிரத்து 787 பேர் தேர்வு எழுதவில்லை. திருவள்ளூரில் உள்ள தேர்வு மையத்தில் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார், வருவாய் ஆய்வாளர் கணேசன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வாக்குவாதம்

திருவள்ளூர் தாலுக்காவிற்குட்பட்ட பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்ற தேர்வு மையங்களில் ஒரு நிமிடம் காலதாமதாக வந்தவர்கள் முதல் அரை மணி நேரம் தாமதமாக வந்தவர்கள் வரை ஒருவரையும் தேர்வு மையத்திற்குள் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

இதனால் அதிகாரிகளிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேர்வு எழுத அனுமதிக்காததால் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றத்துடன் வீட்டிற்கு சென்றனர்.

போராட்டம்

இதேபோல் திருத்தணி வட்டாரத்துக்கு உட்பட்ட தேர்வு மையங்களில் காலதாமதமாக வந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை. குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லை என்பதால் அனுமதி மறுக்கபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருத்தணி ஆர்.டி.ஓ. ஹசரத்பேகம் வாகனத்தை, தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதற்கு அவர், தேர்வு எழுதும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக வரவேண்டும் எனவும், ஒரு நிமிடம் கால தாமதமாக வந்தாலும் அனுமதி மறுக்கப்படும். என கூறினார். தொடர்ந்து தேர்வர்கள் தேர்வு எழுத முடியாமல் ஏமாற்றுத்துடன் திரும்பி சென்றனர்.

மாற்றுத்திறனாளி அவதி

மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு அறை ஒதுக்கப்படும் என அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால், நேற்று திருத்தணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைப்பெற்ற குரூப்-4 தேர்விற்கு திருத்தணி ஒன்றியம், மத்தூர் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜோதி (வயது 29) என்ற மாணவிக்கு அரசு விதிமுறைக்கு மாறாக மாடியில் இடம் ஒதுக்கப்பட்டது. இதனால் அவர் அவதியுற்றார்.

இதுகுறித்து மாணவி அதிகாரிகளிடம் கேட்டபோது, உங்களுக்கான எண் ஒதுக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தனர். பிறகு மாணவி மாடியில் உள்ள அறையில் தேர்வு எழுதினார்.

மேலும் செய்திகள்