< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
பிளஸ்-1 தேர்வில் 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
|20 May 2023 12:15 AM IST
கடலூர் மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 49 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி
கடலூர்
தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் கடலூர் மாவட்டத்தில் 247 பள்ளிகளில் இருந்து எழுதிய 29 ஆயிரத்து 40 மாணவர்களில் 25 ஆயிரத்து 517 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். 3,523 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. மேலும் 247 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதியதில் 49 பள்ளிகள் மட்டுமே 100 சதவீதம் தேர்ச்சியை அடைந்துள்ளது.
அதாவது 117 அரசு பள்ளிகளில் 8 அரசு பள்ளிகளும், 30 அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு பள்ளியும், 100 மெட்ரிக் மற்றும் தனியார் பள்ளிகளில் 40 பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்றுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் மிகவும் பின்தங்கியுள்ளது கல்வித்துறை அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.