< Back
மாநில செய்திகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரில் 480-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை
மாநில செய்திகள்

சுதந்திர தினத்தை முன்னிட்டு வேலூரில் 480-க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் பரதநாட்டியம் ஆடி கின்னஸ் சாதனை

தினத்தந்தி
|
14 Aug 2023 5:35 AM IST

கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், 480-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேசபக்தி பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினர்.

வேலூர்,

இந்தியாவின் சுதந்திர தின விழா ஆகஸ்ட் 15-ந்தேதி(நாளை) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 'சுதந்திர கீதம்' என்ற தலைப்பில் சுதந்திரத்தைப் பேணிக் காக்க வலியுறுத்தி வேலூர் கோட்டை மைதானத்தில் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

கின்னஸ் சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறுவர், சிறுமியர், பெண்கள் உள்பட 480-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தேசபக்தி பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடினர். இந்நிகழ்ச்சியின் முடிவில் பங்கேற்ற அனைவருக்கும் கின்னஸ் சாதனைக்கான சான்று வழங்கப்பட்டது.



மேலும் செய்திகள்