< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் - அமைச்சர் சிவசங்கர்
|23 Oct 2023 10:11 AM IST
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.
சென்னை,
ஆயுத பூஜை மற்றும் தொடர் விடுமுறையையொட்டி அரசு விரைவு பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை சென்னையில் இருந்து பல ஊர்களுக்கு மொத்தம் 8,003 அரசுப்பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகளில் 4.80 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.