< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கி 47 ஆண்டுகள் நிறைவு - கேக் வெட்டி கொண்டாட்டம்
|15 Aug 2024 8:16 PM IST
வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்ட தினத்தை பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.
மதுரை,
மதுரை-சென்னை இடையே இயங்கும், வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு 47 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. கடந்த 1977-ம் ஆண்டு, ஆகஸ்டு 15-ந்தேதி நாள் துவங்கப்பட்ட வைகை ரெயில் சேவையானது, மணிக்கு 105 கிலோ மீட்டர் வேகத்தில் சென்ற இந்தியாவின் அதி விரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது.
இந்நிலையில், இன்றைய தினம் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக பயணிகள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும், ரெயில் ஓட்டுநர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.