< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னை 46-வது புத்தக கண்காட்சி - வார விடுமுறையை முன்னிட்டு குவிந்த வாசகர்கள்
|8 Jan 2023 10:26 PM IST
சென்னை புத்தக கண்காட்சிக்கு இன்று வரை சுமார் 3 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர்.
சென்னை,
சென்னையில் 46-வது புத்தக கண்காட்சி நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் கடந்த 6-ந்தேதி தொடங்கி வரும் 22-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு ஏராளமான புத்தகங்களை வைக்கப்பட்டுள்ளன.
இந்த புத்தக கண்காட்சிக்கு இன்று வரை சுமார் 3 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர். குறிப்பாக இன்றைய தினம் வார விடுமுறை என்பதால் அதிக அளவில் மக்கள் வருகை தந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சியில் புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள், நவீன எழுத்தாளர்களின் படைப்புகள், கவிதைத் தொகுப்புகள், கட்டுரைப் புத்தகங்கள், அறிவியல், புனைவு இலக்கியங்கள், நாவல்கள், சிறுவர்களுக்கான புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.