< Back
மாநில செய்திகள்
நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழா:  ஜனவரி 3ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
மாநில செய்திகள்

நாகூர் தர்காவில் 466ம் ஆண்டு கந்தூரி விழா: ஜனவரி 3ம் தேதி நாகை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தினத்தந்தி
|
24 Dec 2022 9:57 AM IST

நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழாவையொட்டி நாகை மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகை,

நாகையில் ஆண்டுதோறும் கந்தூரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில் சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும் விழாவில் தமிழகத்தில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம்.

இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள் மற்றும் வண்ண விளக்குகளால் அப்பகுதி முழுவதும் அலங்காரங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் ஜனவரி 2-ம் தேதி சந்தனக் கூடு ஊர்வலம் நடைபெறும்.

பின்னர் ஜனவரி-3 ம் தேதி பெரிய ஆண்டவருக்கு சந்தனம் பூசும் திருவிழா நடைபெறுவதால் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். இதனை கருத்தில் கொண்டு ஜனவரி 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் செய்திகள்