< Back
மாநில செய்திகள்
தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் 4,657 வழக்குகள் பதிவு
மாநில செய்திகள்

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் 4,657 வழக்குகள் பதிவு

தினத்தந்தி
|
10 Nov 2023 7:46 PM IST

535 டிக்கெட் பரிசோதகர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டதில் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே சென்னை கோட்டத்தில் இன்று ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்ட டிக்கெட் பரிசோதனையில் 4,657 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 535 டிக்கெட் பரிசோதகர்கள் இன்று கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் ரூ.27.16 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டத்திற்குப் புறம்பாக ரெயிலில் எளிதில் தீப்பற்றும் வெடி பொருட்களை எடுத்து வந்த 414 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்