< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"46 லட்சம்.. ஆனா கொஞ்சம் கூட தரம் இல்லை" - பள்ளி சுற்றுச் சுவரை கையால் பெயர்த்து எடுத்த மக்கள்
|26 Sept 2022 8:52 PM IST
ஈரோட்டில் அரசு பள்ளியில் தரமற்ற முறையில் கட்டுப்படுவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு பள்ளியில் தரமுற்ற முறையில் கட்டப்படும் சுற்றுச்சுவரை இடித்து விட்டு புதிய சுவர் கட்டித் தர வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மில்மேடு அரசு உயர்நிலைப்பள்ளியில் சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் நிலையில், பள்ளியை சுற்றிலும் பாதுகாப்பிற்காக 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச் சுவர் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சுவர், தரமற்ற முறையில் கட்டுப்படுவதாக மாணவர்களின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய சுற்றுச் சுவர் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.