< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
புழல் மத்திய சிறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 46 கைதிகள்
|7 April 2023 5:24 PM IST
புழல் சிறையில் 46 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. புழல் சிறையில் உள்ள கைதிகளும் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.
அதன்படி விசாரணை சிறையில் 10 பேர், தண்டனை சிறையில் 32 பேர், பெண்கள் சிறையில் 4 பேர் என மொத்தம் 46 கைதிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வருகிறார்கள். இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை சிறைத்துறை நிர்வாகம் செய்துள்ளது.