< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.4.52 லட்சம் பறிமுதல் - 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு
|6 Nov 2022 6:49 PM IST
இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத 4லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி,
பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக புகார் வந்தது. இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது அலுவலகத்தில் கணக்கில் வராத 4 லட்சத்து 52 ஆயிரத்து 800 ரூபாய் கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து, பொறுப்பு சார் பதிவாளர் சுப்பையா, புரோக்கர்கள் ராம்குமார், ஜெயா, கலை செல்வன், ராஜேஷ், குமார், சுஜி, சுபாஜினி ஆகிய 8 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுப்பையா அடுத்த ஆண்டு பணிநிறைவடையும் தருவாயில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.