< Back
மாநில செய்திகள்
கல்வராயன்மலையில் 4,500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

கல்வராயன்மலையில் 4,500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல்

தினத்தந்தி
|
19 May 2023 12:15 AM IST

கல்வராயன்மலையில் 4,500 லிட்டர் சாராய ஊறல் பறிமுதல் செய்யப்பட்டது.

கச்சிராயப்பாளையம்,

கல்வராயன்மலையில் உள்ள வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார் சென்றது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்பேரில் கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ், கச்சிராயப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் கல்வராயன்மலை வனப்பகுதியில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அரண்மனை புதூர் வனப்பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் 3 ஆயிரத்து 500 லிட்டர் சாராய ஊறல் அமைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சியதாக சத்யராஜ் என்பவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்த நாட்டுத்துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். மேலும் தாழ் வெள்ளார் கிராமத்திலும் 1000 லிட்டா் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர்.

மேலும் செய்திகள்