< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சியில் 450 லிட்டர் கள்ளச்சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சியில் 450 லிட்டர் கள்ளச்சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல்கள் அழிப்பு - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

தினத்தந்தி
|
27 May 2023 3:10 PM IST

கல்வராயன் மலைப் பகுதியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியான நிலையில், சென்னை வடக்கு மண்டல மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு எஸ்.பி. செந்தில்குமார் மற்றும் கள்ளக்குறிச்சி போலீசார் இணைந்து கல்வராயன் மலைப் பகுதியில் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினர்.

அப்போது கள்ளச்சாராயம் விற்பனை செய்த வஞ்சிக்குழி கிராமத்தைச் சேர்ந்த தங்கராசு என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட 450 லிட்டர் கள்ளச்சாராயம், 900 லிட்டர் சாராய ஊறல்களை அதிகாரிகள் தரையில் கொட்டி அழித்தனர். தொடர்ந்து கல்வராயன் மலைப் பகுதியில் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்