< Back
மாநில செய்திகள்
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரே மாதத்தில் 4.5 லட்சம் பயணிகள் அதிகரிப்பு
சென்னை
மாநில செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயிலில் ஒரே மாதத்தில் 4.5 லட்சம் பயணிகள் அதிகரிப்பு

தினத்தந்தி
|
1 Oct 2022 4:26 PM IST

சென்னை மெட்ரோ ரெயிலில் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 61 லட்சம் பேர் பயணித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பயணிகளுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.

கடந்த ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 2 கோடியே 47 லட்சத்து 98 ஆயிரத்து 227 பயணிகள் பயணித்தனர். ஜூலை மாதம் 53 லட்சம் பேர் பயணம் செய்த நிலையில் ஆகஸ்டு மாதம் 56.6 லட்சமாக உயர்ந்தது. செப்டம்பர் மாதத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

கடந்த மாதம் 61 லட்சத்து 12 ஆயிரத்து 906 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் அதிகமாகும். 4.46 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று மட்டும் 2 லட்சத்து 46 ஆயிரத்து 404 பேர் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்து உள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் கியூஆர் குறியீடு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 4 லட்சத்து 98 ஆயிரத்து 351 பேர் பயணம் செய்தனர். பயண அட்டை பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 38 லட்சத்து 23 ஆயிரத்து 810 பேர் பயணம் செய்தனர்.

மேலும் செய்திகள்