< Back
மாநில செய்திகள்
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 4,466 பேர் எழுதினர்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 4,466 பேர் எழுதினர்

தினத்தந்தி
|
26 Jun 2022 2:34 PM IST

திருவள்ளூர் மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 4,466 பேர் எழுதினர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவள்ளூர், காக்களூர், பாண்டூர், திருப்பாச்சூர், திருத்தணி ஆகிய 5 மையங்களில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது.

இதற்காக ஏற்கனவே விண்ணப்பித்த 5 ஆயிரத்து 548 பேருக்கு தேர்வு எழுத கடிதம் பெற்ற விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத காலை முதலே தேர்வு மையத்தில் தேர்வு எழுத குவிந்தனர். தேர்வு மையத்திற்கு முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரையும் முழுவதுமாக பரிசோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதித்தனர்.

சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு எழுத விண்ணப்பித்த 5 ஆயிரத்து 548 பேரில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 தேர்வு மையங்களில் நேற்று 4,466 பேர் தேர்வு எழுதினார்கள். 1,082 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்