< Back
மாநில செய்திகள்
மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 440 கோடி இலவச பயணங்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்
மாநில செய்திகள்

மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்தின் கீழ் 440 கோடி இலவச பயணங்கள் - அமைச்சர் சிவசங்கர் தகவல்

தினத்தந்தி
|
15 March 2024 9:43 PM IST

மாநில திட்டகுழு ஆய்வு அறிக்கையின்படி சராசரியாக ஒரு பெண்ணுக்கு ரூ.900 மிச்சமாகிறது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் இடைநில்லா பேருந்து சேவையை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேருந்தில் சிறிது தூரம் பயணம் செய்த அமைச்சர் சிவசங்கர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர், தமிழக அரசின் மகளிருக்கான விடியல் திட்டத்தின் கீழ் தற்போது வரை 440 கோடி இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் மாநில திட்டகுழு ஆய்வு அறிக்கையின்படி சராசரியாக ஒரு பெண்ணுக்கு 900 ரூபாய் மிச்சமாகிறது எனவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்