44 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து: பேருந்து நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
|மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை,
சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், சென்னை - தாம்பரம் மார்க்கத்தில் 44 புறநகர் மின்சார ரெயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டதால், தாம்பரம், குரோம்பேட்டை பகுதியில் பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் இந்த வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை வழித்தடத்தில் வழக்கத்தை விட கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துதுறை தெரிவித்துள்ளது.