< Back
மாநில செய்திகள்
191 பெண்கள் உள்பட தமிழகத்தில் 436 பேருக்கு கொரோனா
மாநில செய்திகள்

191 பெண்கள் உள்பட தமிழகத்தில் 436 பேருக்கு கொரோனா

தினத்தந்தி
|
10 Sept 2022 4:12 AM IST

தமிழகத்தில் நேற்று 245 ஆண்கள், 191 பெண்கள் என மொத்தம் 436 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 245 ஆண்கள், 191 பெண்கள் என மொத்தம் 436 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 87 பேர், கோவையில் 57 பேர் உள்பட 36 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. தமிழகத்தில் 21 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 10-க்கும் கீழ் உள்ளது. அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் பாதிப்பு இல்லை.

ஆஸ்பத்திரியில் 373 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 46 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 70 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் நேற்று கொரோனாவால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி 4 ஆயிரத்து 918 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்