< Back
மாநில செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் 4,300 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரி நேரில் ஆய்வு
கடலூர்
மாநில செய்திகள்

நெல்லிக்குப்பத்தில் 4,300 டன் குப்பைகள் அகற்றம் அதிகாரி நேரில் ஆய்வு

தினத்தந்தி
|
17 Oct 2023 1:06 AM IST

நெல்லிக்குப்பத்தில் 4,300 டன் குப்பைகள் அகற்றப்பட்டதை அதிகாரி ஆய்வு செய்தார்.

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள், சரவணபுரத்தில் உள்ள குப்பை கிடங்கில் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இதனை மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக பிரிக்கப்படுகிறது. இதில் மக்காத குப்பைகள் தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கும், மக்கும் குப்பை பதப்படுத்தி உரம் தயாரித்து விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இதுவரை 4,300 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளது. மேலும் 1,500 டன் குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை அண்ணாமலை பல்கலைக்கழக திட்ட நிர்வாகி ராஜ்குமார் நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குவிந்துள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுவதோடு, மற்றொரு பகுதியில் குவிந்து கிடக்கும் 4,900 டன் குப்பைகளையும் விரைந்து அகற்றும்பணியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது நகரமன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், நகராட்சி கமிஷனர் கிருஷ்ணராஜன், பணி மேற்பார்வையாளர் சரவணன், ஒப்பந்ததாரர் குமரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்