< Back
மாநில செய்திகள்
குரூப்-4 தேர்வை 41,307 பேர் இன்று எழுதுகின்றனர்
வேலூர்
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வை 41,307 பேர் இன்று எழுதுகின்றனர்

தினத்தந்தி
|
23 July 2022 9:02 PM IST

வேலூர் மாவட்டத்தில் 41 ஆயிரத்து 307 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றளனர்.

வேலூர்

வேலூர் மாவட்டத்தில் 41,307 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் குரூப்-4 தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. வேலூர் மாவட்டத்தில் 41,307 பேர் குரூப்-4 தேர்வு எழுதுகின்றனர். தேர்வினை முன்னிட்டு அனைத்து தேர்வுக் கூடத்திற்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கூடத்திற்கு பைகள், புத்தகங்கள் மற்றும் செல்போன், கால்குலேட்டர் போன்ற மின்னணு சாதனங்களை கண்டிப்பாக எடுத்துவரக் கூடாது. கருப்பு மை பேனா மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொரோனா காலமாக இருப்பதால் கொரோனா விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றும், தேர்வர்கள் காலை 9 மணிக்கு உள்ளாக தேர்வுக் கூடத்திற்குள் சென்றிருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் டி.என்.பி.சி தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையத்தை தயார் செய்யும் பணியில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதீஸ்வரன் பிள்ளை மற்றும் ஆசிரியர்கள் நேற்று ஈடுபட்டனர்.

தேர்வு அறைகளில் தேர்வு எண் ஒட்டும் பணி நடந்தது. மேலும் தேர்வு மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குறிப்பு:-

புட்நோட் வைக்கவும்.

மேலும் செய்திகள்