< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
41 பல்கலை., உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
|22 Sept 2022 8:16 PM IST
தமிழகத்தில் 41 பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றி தமிழக அரசுஅரசாணை வெளியிட்டது.
சென்னை,
தமிழகத்தில் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளாக இயங்கிவந்த 41 கல்லூரிகள் நேரடியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 41 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் கல்லூரிகளில் ஆசிரியர், ஆசிரியரல்லா பணியிடங்களை தோற்றுவித்தும், அதற்கான செலவினங்களுக்கு நிதி ஒப்பளிப்பு வழங்கியும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கலை, அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றக்கூடிய 10 ஆயிரம் கவுரவ விரிவுரையாளர்களுக்கான சம்பளம் அந்தந்த மண்டல இணை இயக்குநர் மூலமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.