< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
போளூரில் 40.2 மில்லி மீட்டர் மழை
|30 Aug 2023 5:21 PM IST
போளூரில் 40.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
போளூரில் 40.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம்அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வந்தனர். அக்னி நட்சத்திர நாட்களை விட வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாகவே காணப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திருவண்ணாமலை மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
அதிகபட்சமாக போளூரில் 40.2 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:-
கலசபாக்கம் - 39, ஜமுனாமரத்தூர் - 38, செங்கம் - 24.6, திருவண்ணாமலை - 7.2, தண்டராம்பட்டு - 4.2, கீழ்பென்னாத்தூர் - 3.