கடலூர்
பெண்ணிடம் 40 பவுன் நகை, ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்
|பண்ருட்டி அருகேபெண்ணிடம் 40 பவுன் நகை, ரூ.5 லட்சம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த அவரது கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்
பண்ருட்டி
கொலை மிரட்டல்
பண்ருட்டி அருகே உள்ள ஆனத்தூர் கம்பர் தெருவில் வசித்து வருபவர் பஞ்சமூர்த்தி மகள் லட்சுமி(வயது 32). இவருக்கும் அவையாம் பாளையம் கிராமத்தை சேர்ந்த கேசவன் மகன் வெங்கடேசன்(38) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. ஆனால் குழந்தை இல்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று வெங்கடேசன் மற்றும் அவரது தாயார் மற்றும் உறவினர் ஆறுமுகம் மனைவி குமாரி ஆகிய 3 பேரும் சேர்ந்து லட்சுமியிடம் நீ தொடர்ந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்றால் ரூ.5 லட்சம் பணம், 40 பவுன் நகை வரதட்சணையாக தர வேண்டும். அப்படி தரவில்லை என்றால் விவாகரத்து வாங்கிக்கொண்டு ஓடிவிடு. இல்லை என்றால் உன்னை கொலை செய்து விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
3 பேர் மீது வழக்கு
இது குறித்து லட்சுமி பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வெங்கடேசன், அவரது தாயார் மற்றும் குமாரி ஆகிய 3 பேர் மீதும் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.