< Back
மாநில செய்திகள்
மதுரை
மாநில செய்திகள்
கள்ளழகர் கோவிலில் ரூ.40½ லட்சம் உண்டியல் காணிக்கை
|21 July 2022 3:13 AM IST
கள்ளழகர் கோவிலில் ரூ.40½ லட்சம் உண்டியல் காணிக்கை பெறப்பட்டது.
அழகர்கோவில்,
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலின் உண்டியல்கள் அங்குள்ள திருக்கல்யாண மண்டப வளாகத்தில் திறந்து எண்ணப்பட்டது.
இதில் ரூ.40 லட்சத்து 68 ஆயிரத்து 261-ம், தங்கம் 31 கிராமும், வெள்ளி 380 கிராமும், வெளிநாட்டு டாலர் நோட்டுகளும் இருந்தன.
உண்டியல் திறப்பின் போது கள்ளழகர் கோவில் துணை ஆணையர் ராமசாமி, திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையர் சுரேஷ், தக்கார் பிரதிநிதி நல்லதம்பி, கண்காணிப்பாளர்கள் சேகர், பிரதிபா, அருட்செல்வம் மற்றும் பணியாளர்கள், சேவா சங்கத்தினர், உடன் இருந்தனர்.