< Back
மாநில செய்திகள்
டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-மடிக்கணினி திருட்டு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-மடிக்கணினி திருட்டு

தினத்தந்தி
|
6 May 2023 12:45 AM IST

டிரைவர் வீட்டில் 4 பவுன் நகை-மடிக்கணினி திருட்டுபோனது.

மங்களமேடு:

பெரம்பலூர் மாவட்டம், மங்களமேட்டை அடுத்துள்ள கீழ்க்குடிகாடு மேற்குத்தெருவை சேர்ந்தவர் அறிவழகன். டிரைவர். இவரது மனைவி சுசிலா(வயது 47). அறிவழகன் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார். சுசிலா வீட்டில் இருந்தார். இந்நிலையில் நேற்று காலை அவர் வீட்டை பூட்டிவிட்டு உறவினர்களுடன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் உள்ள பீரோவை உடைத்து, அதில் இருந்த 4 பவுன் நகை மற்றும் ஒரு மடிக்கணினியை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுசிலா, இது குறித்து மங்களமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்