திருவண்ணாமலை
4 வாகனங்கள் பறிமுதல்
|ஆரணி அருகே மண் கடத்தியதாக 4 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த 12புத்தூர் கிராமத்தில் ஏரியில் இருந்து முரம்பு மண் கடத்துவதாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமிக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வருவாய்த்துறையினர் அங்கு சென்றனர். அதிகாரிகள் வருவதை கண்டதும் டிப்பர் லாரி டிரைவர் மற்றும் பொக்லைன் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அதிகாரிகள் டிப்பர் லாரி, பொக்லைன் எந்திரத்தை பறிமுதல் செய்து ஆரணி தாலுகா போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாபுதீன், ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல ஆரணி தாலுகா போலீசார் சங்கீதவாடி கிராமம் அருகில் ரோந்து சென்றனர். அப்போது ஏரியில் மண் கடத்திக் கொண்டிருந்தவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடிவிட்டனர். அதைத் தொடர்ந்து போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.