< Back
மாநில செய்திகள்
வேலூர்
மாநில செய்திகள்
கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைப்பு
|26 May 2022 11:58 PM IST
அடகுக்கடையில் ரூ.1 கோடி ெகாள்ளை நடந்த சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருவலம்
வள்ளிமலையை அடுத்த மேல்பாடியை சேர்ந்தவர் அணில்குமார் (வயது 29). இவர், காட்பாடி அருகே உள்ள சேர்க்காடு கூட்ரோட்டில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையின் சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த மர்மநபர்கள், ரூ.1 கோடி மதிப்பிலான நகை, வெள்ளி பொருட்கள், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கொள்ளையர்களை பிடிக்க காட்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தன், திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ராஜசேகர், ஜெகதீசன் ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
அதைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஆந்திரா, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.