< Back
மாநில செய்திகள்
2 சொகுசு கார்களுடன் 4 டன் குட்கா பறிமுதல்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

2 சொகுசு கார்களுடன் 4 டன் குட்கா பறிமுதல்

தினத்தந்தி
|
17 July 2023 12:30 AM IST

வாலாஜா சுங்கச்சாவடி அருகே 2 சொகுசு கார்களுடன் 4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

குட்கா பறிமுதல்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாவை அடுத்த சென்னசமுத்திரம் சுங்கச்சாவடி பகுதியில் வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா தலைமையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு சொகுசு கார்கள் சென்னை நோக்கி வந்தன. போலீசார் அந்த கார்களை நிற்கும்படி சைகை செய்தனர். ஆனால் கார்கள் நிற்காமல் வேகமாகச் சென்றன.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த கார்களை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனர். அதில் பண்டல் பண்டல்களாக நான்கு டன் குட்கா மற்றும் புகையிலை மூட்டைகள் இருந்தன. இதன் மதிப்பு ரூ.4 லட்சம் என்று கூறப்படுகிறது. அவற்றை, காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர்.

2 வாலிபர்கள் கைது

காரில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணயில் அவர்கள் ராஜஸ்தான் மாநிலம் ஜுவல்நாத் மாவட்டத்தை சேர்ந்த வெர்ஷிகான் (வயது 25), பெங்களூருவை சேர்ந்த பியூரிஷா (22) என்பது தெரிய வந்தது. அவரகள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட கார் ஒன்றில் வழக்கறிஞர்கள் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்