< Back
மாநில செய்திகள்
சிறுமி தீக்குளிப்பு சம்பவத்தில் 4 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

சிறுமி தீக்குளிப்பு சம்பவத்தில் 4 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது

தினத்தந்தி
|
30 Sept 2022 5:12 PM IST

சிறுமி தீக்குளிப்பு சம்பவத்தில் 4 வாலிபர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே உள்ள மோவூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி அதே கிராமத்தை சேர்ந்த ஞானமூர்த்தி (வயது 20) என்பவருடன் கிராம எல்லையில் உள்ள மாந்தோப்பில் தனியாக பேசிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அஜித்குமார் (25), அஜித் (26), கோகுலகிருஷ்ணன் (24) ஆகியோர் செல்போனில் படம் எடுத்ததாக தெரிகிறது. இந்தப் படத்தை பெற்றோர்களிடம் காண்பிப்போம் என்று விளையாட்டுத்தனமாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 25-ந் தேதி மனமுடைந்த 17 வயது சிறுமி தீக்குளித்து விட்டதாக கூறப்படுகிறது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமியை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இது குறித்து பென்னலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இது தொடர்பாக ஞானமூர்த்தி, அஜித்குமார், அஜித், கோகுலகிருஷ்ணன் ஆகிய 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் இந்த 4 பேரை ஊத்துக்கோட்டைகோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்