< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
|22 July 2024 7:43 AM IST
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கோத்தகிரி, குன்னூர், ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பலத்த மழை பெய்து வருவதுடன் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்த நிலையில், கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நீலகிரியில் உள்ள 4 தாலுகா (உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி) பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவிட்டுள்ளார். நீலகிரியில் இன்றும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.