< Back
மாநில செய்திகள்
மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த 4 மாணவர்கள் கைது
சென்னை
மாநில செய்திகள்

மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த 4 மாணவர்கள் கைது

தினத்தந்தி
|
19 Aug 2022 6:58 AM IST

சென்னை அண்ணாசாலை தேவி தியேட்டர் அருகே மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த 4 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பிராட்வே- மேற்கு சைதாப்பேட்டை (தடம் எண்-18) பிங்க் நிற மாநகர பஸ்சில் நேற்று முன்தினம் பயணித்த கல்லூரி மாணவர்கள், படியில் தொங்கியபடி பாட்டுப்பாடி வந்தனர். இதனால் பஸ் டிரைவர் ராஜேந்திரன், கண்டக்டர் சசிகுமார் ஆகியோர் மாணவர்களை கண்டித்து பஸ்சைவிட்டு இறக்கிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்துவிட்டு தப்பினர். அண்ணாசாலை தேவி தியேட்டர் அருகே இந்த சம்பவம் நடைபெற்றது.

இது குறித்து திருவல்லிக்கேணி போலீஸ்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்தது நந்தனம் அரசு கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்தது. 10 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் 4 மாணவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.

மேலும் செய்திகள்