< Back
மாநில செய்திகள்
சென்னை மெரினா கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு.!
மாநில செய்திகள்

சென்னை மெரினா கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுப்பு.!

தினத்தந்தி
|
21 Aug 2023 11:45 PM IST

ரோந்து பணியில் இருந்த போலீசார் சிலைகளை மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

சென்னை,

சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே உள்ள கடற்கரையில் 4 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. ரோந்து பணியில் இருந்த போலீசார் சிலைகளை மீட்டு காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

கோயில்களில் இருக்கும் பழைய கற்சிலைகளை அகற்றி புதிய சிலைகளை அமைக்கும் போது ஆகம விதிப்படி பழைய கற்சிலைகளை நீர்நிலைகளில் வீசுவது வழக்கம். அதுபோல் யாரும் செய்தார்களா? அல்லது வேறு யார் வீசினார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்